கொரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு வரப் போகும் தடுப்பூசி எந்த நாட்டினுடையது தெரியுமா..? முக்கிய அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்புக்கான மருந்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிக்கின்றார்.கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.அத்தோடு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தானது, விலை குறைவாக கிடைக்கும் அதேவேளை, அதனை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளை இலங்கையில் ஏற்படுத்திக் கொள்வது இலகுவாக உள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தை இந்தியாவும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர், ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா, குறித்த மருந்தை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதனால், இலங்கைக்கு குறித்த மருந்தை பெற்றுக்கொள்வது இலகுவான விடயமாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.இதேவேளை, உள்நாட்டு மருத்துவம் குறித்து ஆயுர்வேத திணைக்களம் ஆய்வுகளை நடத்தி, சான்றிதழை வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிடுகின்றார்.எனினும், அரசாங்கம் என்ற ரீதியில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஆய்வு கூடமொன்றின் ஊடாக ஆய்வு செய்யப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.அத்தோடு ஆய்வு கூடத்தின் ஊடாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது உறுதிப்படுத்தப்படும் வரை அந்த மருந்தை நோயாளர்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் வழங்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிக்கின்றார்.