இலங்கையின் ஓர் பிரதேசத்தில் திடீரென வீழ்ந்து இறந்து போகும் பறவைகள்..!! தொடரும் மர்மம்..!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள எலுவான்குளம் பகுதியில் ஏராளமான பறவைகள் திடீரென உயிரிழந்துள்ளன.குறித்த பறவைகள் ஏதேனும் ஒரு விஷப் பொருளை சாப்பிட்டிருக்கலாம் என்று உள்ளூர் வனவிலங்கு அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரிக்குமாறு உள்ளூர்வாசிகள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.திடீரென ஏராளமான பறவைகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.