திரை ரசிகர்களுக்கு ஓர் பெருமகிழ்ச்சியான செய்தி…தற்போது வெளியாகியுள்ள பெருமகிழ்ச்சி தரும் தகவல்..!!

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் என்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து திரையரங்குகளையும் மூட அரசாங்கம் ஒக்டோபரில் முடிவு செய்தது.கொரோனா தொற்றுநோயால் தேசிய திரைப்பட கூட்டுதானபத்தின் கீழ் இயங்கும் திரையரங்குகள் மூடப்பட்ட இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும்.நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பரவலின் போது திரையரங்குகள் ஆரம்பத்தில் மார்ச் 14 முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.இந்நிலையில், கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் ஜூன் 27 முதல் திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.