இரு பாதிரியார்களுடன் நேரடி உறவில் இருந்த கன்னியாஸ்திரி..!! 28 வருடங்களின் பின் வெளிவந்த கொடூரக் கொலையின் நீதிமன்றத் தீர்ப்பு!!

கேரளாவில் உள்ள கோட்டயத்தில் ‘கனன்யா’ கத்தோலிக்க தேவாலயம் நடத்தி வரும் பியஸ் கான்வென்ட் விடுதியில் தங்கி, கல்வி பயின்று வந்தவர் கன்னியாஸ்திரீ அபயா. அவருக்கு 19 வயது. அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு கன்னியாஸ்திரீ ஷெர்லி மார்ச் 26 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தேர்வுக்குப் படிப்பதற்காக எழுந்தபோது கடைசியாக அபயாவை பார்த்திருக்கிறார்.அவ்வளவு தான். குளிர் நீரில் முகம் கழுவ அபயா சமையலறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது பாதிரியார் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, மற்றும் பாதிரியார் புட்ரிகயல் ஆகியோர் உடல் உறவில் ஈடுபட்டிருந்த காட்சியை அபயா பார்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. அதாவது 3 பேர் இணைந்து சமையல் அறையில் உறவில் இருந்ததை அபயா பார்த்துவிட்டார்.

இதை சகோதரி அபயா வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவருடைய கழுத்தை பாதிரியார் கோட்டூர் நெரிக்கஇ அபயாவை கோடாரியால் சகோதரி செபி தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மூவரும் சேர்ந்து உடலை கிணற்றில் வீசிவிட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. கேரளாவில் நடந்த வழக்கில் இதுவே மிக நீண்ட வருடம் நடைபெற்ற வழக்கு ஆகும். 1992ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.
நேற்றைய தினம்(23) தான் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம்.அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.

28 வருடங்களுக்கு முன்னரே தேவாலயங்களில் இது போன்ற பெரும் சீர்கேடுகள் நடந்து வந்துள்ளது. மூவர் இணைந்து முக்கோண காதலில் கூட இருந்துள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சி தரும் விடயமாக பேசப்பட்டு வருகிறது.அபயாவின் ஆத்ம சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக.