இளம் யுவதிகளின் வங்கி அட்டையை லாவகமாகத் திருடி மது அருந்திய கில்லாடிகளைத் தேடி வலை வீச்சு..!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி, மதுபானம் கொள்வனவு செய்த பலே கில்லாடிகளை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

யாழ்ப்பாணம் அடைக்கலமாதா கோவிலில் கடந்த 21 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பெண்களின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த கைப்பையைத் திருடி, அதிலிருந்த வங்கி (ஏ.ரி.எம்) அட்டைகளைப் பயன்படுத்தி 4 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.இதேவேளை அந்தக் கைப்பையில் 5 ஆயிரம் ரூபா பணம் இருந்ததாகவும், தமது தேசிய அடையாள அட்டை வீதியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.