நாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!! இன்று மட்டும் 686 பேர் வீடுகளுக்கு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் மேலும் 686 பேர் இன்று(வியாழக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் 7 ஆயிரத்து 887 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.