வார இறுதியில் இலங்கையில் ஊரடங்கா..? வெளியாகும் வதந்தி குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

ஜனவரி இரண்டாம் திகதி நள்ளிரவிலிருந்து மேல் மாகாணத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ள தகவல் பொய்யாகுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வார இறுதியில் மேல்மாகாணத்தை முடக்கும் எண்ணம் எதுவுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.தனி நபர்கள் சிலர் போலியான தகவல்களை பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன.கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ கிறிஸ்மஸ் வார இறுதியில் தனிமைப்படுதல் ஊரடங்கினை அறிவிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.அத்துடன் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு செல்வதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரிகள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை, சில தனிநபர்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்ட முயல்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.அனைத்தும் பொதுமக்களின் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் ஆனால், பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.