டெங்கு நோயின் தீவிரத் தன்மையை இலகுவாகக் கண்டறியும் புதிய கண்டுபிடிப்பு..!! களனிப் பல்கலைக்கழகம் சாதனை..!!

டெங்கு காய்ச்சலின் தீவிரத்தன்மையை கண்டறிய உயிரியல் செயற்கைக் கருவியொன்றை களனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் மிகச்சிறிய சதவீதமானவர்கள் மட்டுமே தீவிர கட்டத்தை எட்டுகிறா்கள். அப்படியாக, தீவிர இரத்தக்கசிவு காய்ச்சல் நிலைக்கு செல்லும் ஒருவர், அந்த அறிகுறியை காண்பிப்பதற்கு முன்னதாகவே கண்டறிய இந்தக் கருவி உதவுமென தெரிவிக்கப்படுகிறது.ஆரம்ப கட்டத்தில், ஒரு நபருக்கு இலேசான டெங்கு காய்ச்சல் வருமா அல்லது டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் வருமா என்பதை சுகாதார அதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது. ஆகவே டெங்கு நோயாளிகள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உபகரணம், தீவிரமான டெங்குவை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடியும் என்று ஆராய்ச்சி குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.