வேதங்களில் சொல்லப்பட்ட கொரோனா மருந்தாம்..இலங்கையில் பட்டையைக் கிளப்பும் இன்னுமொரு கொரோனா மருத்துவர்..!!

காளித்தாயின் அருளில் கொரோனா மருந்துப் பாணி தயாரித்ததாக கெகாலை தம்மிக்க பண்டார கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரித்திகல தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவர் தயாரித்ததாகக் கூறப்படும் COVID-19 தடுப்பு மருந்து இன்று அரச தொலைக்காட்சியான சுதந்திரத் தொலைக்காட்சி வலையமைப்பு ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.தேவிந்த லக்ஸிரி ரணசிங்க, பண்டைய வேதங்களில் காணப்படும் சமையல் குறிப்புகளின் அடிப்படையில் இந்த கலவையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.