இலங்கையர்களின் மது மற்றும் புகையிலைப் பாவனை தொடர்பில் வெளியாகியுள்ள பேரதிர்ச்சி தரும் தகவல்..!! தினமும் விரயமாகும் 1 பில்லியன் ரூபா..!!

இலங்கையர்கள் தினமும் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களிற்காக  பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வோட்டர் எட்ஜ் விடுதியில் புகையிலை மற்றும் மது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.இலங்கையில் தினமும் சுமார் 60 பேர் புகைபிடிப்பதால் இறக்கின்றனர். சுமார் 50 பேர் மதுபானம் காரணமாக இறக்கின்றனர். இந்த இரண்டு காரணங்களால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 பேர் இறக்கின்றனர்.சிகரெட் மற்றும் மதுபானங்கள் மூலம் அரசாங்கம் வரி பெற்றாலும், போதைப்பொருள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வரி வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாக செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.