தற்போது கிடைத்த செய்தி..யாழ் மற்றும் கிளிநொச்சியில் 10 பேருக்கு கொரோனா..!! மருதங்கேணி உப கொத்தணி 103 ஆக உயர்வு..!!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கிளிநொச்சி பாரதிபுரத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்மூலம், மருதங்கேணி உப கொத்தணி 103 ஆக உயர்ந்துள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 481 பிசிஆர் மாதிரிகளும், மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 120 பிசிஆர் மாதிரிகளும் ஆய்வுசெய்யப்பட்டன.