யாழ்.மாநகர சபையின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்..? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் இன்று..!!

யாழ் மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள், மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார்கள்.யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு முறை தோல்வியடைந்ததை தொடர்ந்து, முதல்வர் பதவி இயல்பாகவே வறிதானது.வரும் 30ஆம் திகதி புதிய முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.

இதில் அனேகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுபவரே வெற்றியடைய வாய்ப்புள்ளது. ஈ.பி.டிபியும், முன்னணியும் ஒரே நிலைப்பாட்டிற்கு வர மாட்டார்கள் என்ற சூத்திரத்தின் அடிப்படையில், கூட்டமைப்பு வெற்றிபெறுமென எதிர்பார்க்கலாம்.கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஆனல்ட்டே களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கூட்டமைப்பின் 3 தலைவர்களும், பெரும்பான்மையான மாநகரசபை உறுப்பினர்களும் ஆர்னல்ட்டையே ஆதரிக்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது.