ஊர்காவற்றுறையில் வணிக கப்பற்றுறை செயலகம் உப அலுவலக கட்டட தொகுதி இன்று திறந்து வைப்பு..!!

யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்த்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் நிதியுதவியில் ஊர்காவற்றுறையில் நிர்மாணிக்கப்பட்ட வணிக கப்பற்றுறை செயலகம் உப அலுவலக கட்டட தொகுதி மற்றும் கடற்கலன் பரிசோதிக்கும் தளம் (Slipway) கௌரவ கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று (23) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.