மாணவனைத் தண்டித்த பாடசாலை அசிரியருக்கு நேர்ந்த கதி..!! கதிரையால் திருப்பி அடித்த பண்பான மாணவன்.!! இலங்கையில் நடந்த அதிர்ச்சி தரும் தகவல்!

கஹடகஸ்டிகிலிய பகுதியில் உள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் ஆசிரியர், மாணவரின் தாக்குதலிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாடசாலையின் தமிழ் மொழி ஆசிரியரான எம்.ரஷீம் என்பவரே தாக்கப்பட்டுள்ளார். க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு வழங்கப்பட்ட வீட்டுப்பாடம் குறித்து நேற்று வகுப்பில் வினவியுள்ளார். இதன்போது, வீட்டுப்பாடம் செய்யாத மாணவன் ஒருவரை கண்டித்தார்.இதனால் கோபமடைந்த மாணவன், கதிரையைால் ஆசிரியரை தாக்கியுள்ளார். தலையில் தாக்கப்பட்டு, ஆசிரியர் காயமடைந்தார்.
ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வகுப்பறையிலிருந்து தப்பியோட முயன்ற மாணவனை, ஏனைய மாணவர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மாணவனின் தந்தை பாடசாலைக்கு சென்று, தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பியோடிள்ளார்.பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர.