2021ல் உலகில் நடக்கப் போவது என்ன..? வெலவெலக்க வைக்கும் தீர்க்கதரிசி பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்..!!

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா பிறக்கவுள்ள 2021-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில்,சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.இருப்பினும், பாபா வாங்கா கணித்து கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்துள்ளது. இதேவேளை இவர் 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார்.ஆனால், அதற்கு முன்னதாக பல விடயங்களை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார்.குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதே போன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார்.இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார். இப்படி இவர் கூறும் விடயங்களில் பல 68 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நடந்துள்ளது.இதனால், இன்னும் அடுத்தாண்டு வருவதற்கு ஒரு சில வாரங்களே உள்ளதால், இவரின் கணிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில், வரும் 2021-ஆம் ஆண்டு குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்ஐரோப்பா மீது மஸ்லின் தீவிரவாதிகள் படையெடுப்பை கொண்டு வரும். நமது கண்டம் மஸ்லின் படையெடுப்பாளர்களிடமிருந்து இரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்றும் கணித்துள்ளார்.
அடுத்த காலகட்டத்தில், ஐரோப்பிய கண்டம் அதன் இருப்பின் முடிவை எட்டக்கூடும். அதாவது இவர் ஐரோப்பியர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் இராசயன ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்.2021 ஆம் ஆண்டில், ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சியடையும். ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான ஒரு கொலை முயற்சியையும், அவருக்கு ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தல், அவரது நாட்டில் இருந்தே வரக் கூடும்.மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மர்மமான நோயால் நோய்வாய்ப்படுவார். அது அவரை காது கேளாதது, மூளை பிரச்சனை சம்பந்தமான நோயாக இருக்கும்.இந்த பிரபஞ்சத்தில் வாழ்க்கை கண்டுபிடிக்கப்படும். அதாவது, திடீரென்று பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது என்பது தெளிவாகத் தெரியும்
அடுத்த 200 ஆண்டுகளில், பிற உலகங்களிலிருந்து மக்கள் தங்கள் ஆன்மீக உடன் பிறப்புகளுடன் தொடர்பு கொள்வார்கள். சோவியத் யூனியன் 21-ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் மீண்டும் கட்டப்படும்.ரயில்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பறக்கும்.பெட்ரோல் உற்பத்தி நின்றுவிடும்.சூரிய ஆற்றல் பற்றி அதிக விவாதங்கள் எழும்.ஒரு வலிமையான டிராகன் மனிதகுலத்தை கைப்பற்றும். மூன்று இராட்சதர்கள் ஒன்று கூடுவார்கள், அதில் சிலரிடம் சிவப்பு பணம் இருக்கும் என்று கணித்துள்ளார். டிராகன் என குறிப்பிடுவதை சீனா என்று சிலர் கருதுகின்றனர்.மூன்று இராட்சதர்கள் என்பதை ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவையாக இருக்கலாம். பணம் சிவப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதால், அது சீனவின் யுவான் நோட்டுகள் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும். எனவே இது நிச்சயமாக சீனா தான் என்று சிலர் கருதுகின்றனர்.அத்துடன் மனிதர்கள் புற்றுநோயில் இருந்து விடுபடுவர். அதாவது புற்றுநோய் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்படும் நாள் வரும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.