இலங்கையில் 15 வயதுச் சிறுவன் கொரோனாவிற்குப் பலி..!!

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகியுள்ளன.இதன்மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் ஒருவரும் உயிரிழந்தார்.

அவர் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு ஐடிஹெச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார்.கோவிட் நிமோனியா, இரத்த விஷம் மற்றும் கடுமையான லுகேமியா ஆகியவற்றால் அவர் உயிரிழந்தார்.கொழும்பு 07 ஐச் சேர்ந்த 72 வயது பெண்ணும் உயிரிழந்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அவர் தனது வீட்டில் உயிரிழந்தார். உயிரிழப்பிற்கான காரணம்  நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.