கிளிநொச்சிப் பிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..இரு வான் கதவுகள் திறப்பு..!!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன.

குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று மாலை இரண்டு வான்கதவுகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரா ல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இரண்டு வான் கதவுகளும் தலா 6″அளவில் திறக்கப்பட்டுள்ளன.இரணைமடு குளத்தின் கீழ் உள்ள தாழ்நில பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 7 அங்குலமாக அதிகரித்துள்ளது.