சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ். உரும்பிராயில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! இன்று மட்டும் 06 பேருக்குத் தொற்று..!!

இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் நடந்த பீ.சீ.ஆர் பரிசோதனையில் யாழ். உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி சற்று முன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(வடபகுதியில் 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் ) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவற்றில் உரும்பிராய் – 1,பாரதிபுரம்- கிளிநொச்சி – 2 மற்றும் கடற்படை முகாம் முழங்காலில் – 2 பேருக்கும்முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.