தற்போது கிடைத்த செய்தி..எழுமாற்றாக நடந்த பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் பாரஊர்தி சாரதியொருவரின் மாதிரியும் பெறப்பட்டது. அவர், கிளிநொச்சி பாரதிபுரம், வை.எம்.சி.ஏ வீதியில் வசிப்பவர். பசளை ஏற்றுவதற்காக தென்பகுதிக்கு சென்று வருபவர்.

அவரது மாதிரியைச் சோதனையிட்டபோது, முடிவு தெரியாத நிலையேற்பட்டது. மீளவும் அவரது மாதிரி சோதனைக்குட்படுத்தப்படும். இந்தவகையான முடிவு கிடைப்பவர்கள் இரண்டாவது சோதனையில் தொற்றாளர்களாகவே பெரும்பாலும் அடையாளம் காணப்படுவார்கள்.
இதையடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்கள் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.இதில், அவரது மகனுக்கும், இன்னொரு குடும்ப உறுப்பினருக்கும் தொற்று உறுதியானது.