சற்று முன்னர் கிடைத்த செய்தி..உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 120 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்..!!

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 120 பேரின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.இதனை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிக கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உடுவிலில் நேற்றும் இன்றும் 220 பேரின் மாதிரிகளில் எவருக்கும் தொற்று இல்லை.நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் நேற்று ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.இதனையடுத்து மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் தொற்று இல்லை எனவும் அறிக்கை கிடைத்துள்ளது.