இலங்கையில் பலருக்கும் தெரியாத VOC நாணயம் மற்றும் பொருட்களின் மதிப்பு.!! அறிந்து கொள்ளுங்கள்..

இலங்கையில் VOC எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பாவனை பொருட்களுக்கு பெரும் மதிப்பு நிலவுகின்றது. VOC பொறிக்கப்பட்ட பொருட்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.சில நேரங்களில் கோடி ரூபாக்களையும் தாண்டுவதுண்டு. ஆசியாவை அந்நியர்கள் ஆக்கிரமித்த காலத்தில் இரண்டாவது ஆக்கிரமிப்பு படையாக ஒல்லாந்தர் 1658ஆம் ஆண்டு இலங்கையில் கரையோர பிரதேசங்களில் ஒல்லாந்தரின் ஆட்சி நிறுவினார்கள்.ஆசியாவில் ஒல்லாந்தருக்கு பல வர்த்தக சங்கங்கள் இருந்த போதிலும், ஒரு வர்த்தக சங்கத்திற்கேனும் ஆசியாவில் செயல்பட முறையான அதிகாரம் இருக்கவில்லை.இதனை கருத்தில் கொண்ட ஒல்லாந்தர் 1602 ஆம் ஆண்டு பலஒல்லாந்த சங்கங்களை ஒன்றிணைத்துஒல்லாந்த_கீழைத்தேச_வர்த்தக சங்கம் என்ற VOC சங்கத்தை நிறுவினார்கள்.அந்த சங்கத்தின் அனுமதிப்பத்திரத்துக்கு அமையஒல்லாந்த அரசின் சார்பாக ஆசியாவில் வர்த்தகத்தை மேற்கொள்ளவும், நாடுகளைக் கைப்பற்றவும்,
கோட்டைகளை அமைக்கவும், ஆளுநர்களை நியமிக்கவும்,உரிய பிரதேசங்களை நிர்வகிக்கவும், VOC சங்கத்துக்கு அனுமதி கிடைத்தது.இதனால், 1602 ஆண்டின் பின்னர் ஒல்லாந்த கீழைத்தேச வர்த்தக சங்கங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலமடைந்தது. இராணுவ கட்டமைப்பும் வலுவாக கட்டியெழுப்பப்பட்டது.

‘பத்தேவியா” எனும் இடத்தில் தமது தலையகத்தை நிறுவி ஆசிய பகுதிகளில் தமது அதிகாரத்தை கட்டி எழுப்பினார்கள்.VOC என்பது *Vereenigde Oost Indische Compagine * என்னும் டச்சுச்சொல்லின் சுருக்கமான வடிவம் VOC ஆகும்.!!