கொரோனா தொற்றாளர் துப்பிய வெற்றிலை எச்சிலால் நேர்ந்த விபரீதம்.!! மூவரைக் கொண்ட குடும்பம் தனிமைப்படுத்தலில்!

சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தொற்றாளர் ஒருவர் வீதியில் துப்பிய வெற்றிலை எச்சிலால் மூவரைக் கொண்ட குடும்பமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், பலாங்கொட நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் ஜன்னல் வழியாக துப்பிய எச்சில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது தெரிவித்துள்ளது.பலாங்கொட- சமனலவௌ மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு வெற்றிலை எச்சிலை துப்பியுள்ளார்.இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் பஸ்ஸை வழிமறித்து, சாரதியிடமும் நடத்துனரிடமும் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.இதன்போதே, கொரோனா தொற்றாளரே தம் மீது எச்சில் துப்பியுள்ளதை சாரதி மூலம் அறிந்துக்கொண்ட அக்குடும்பம்,உடனடியாக தமது வீட்டுக்குச் சென்று சுயதனிமைபடுத்திக் கொண்டதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளானது, சுகாதார தரப்பினரால் கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.