இலங்கையின் ஒரு பகுதியில் பெய்த மீன் மழை..!!

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வந்த வரட்சியுடனான காலநிலையைத் தொடர்ந்து பெய்த மழையின் போது இவ்வாறு மழை நீருடன் மீன்களும் தரையில் வீழ்ந்துள்ளன.மழையுடனான காலநிலையுடன் சிறிய அளவிலான புயல் காற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.சிறிய அளவிலான புயல் காற்று நீர்நிலைகளுக்கு அருகாமையில் செல்லும் போது ஒர் சிறிய வால் போன்றதொன்று உருவாகும் எனவும், அதன் ஊடாக நீர் உறிஞ்சப்பட்டு மேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு உறிஞ்சப்பட்டு எடுத்துச் செல்லப்படும் நீருடன் மீன்களும் அள்ளுண்டு செல்லும் எனவும், இவையே பின்னர் மழை பெய்யும் போது நீருடன் மீன்களும் விழக்காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.