கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிக்கு கொரோனா தொற்றியது எப்படி?

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில் இராணுவ தளபதி கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த நபர் கொட்டாவ பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் இருந்து தொற்றியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.பொரலஸ்கமுவ நோயாளி, கொட்டாவ பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை செல்வதாக தெரியவந்துள்ளது. அந்த நபர் செல்லும் மருந்தகத்தில் இதற்கு முன்னர் 114வது நோயாளி அடையாளம் காணப்பட்டார்.அந்த நபரும் இந்த மருந்தகத்திற்கு வந்துள்ளார் எனத் தெரியவந்தது. நேற்று அடையாளம் காணப்பட்ட பொரலஸ்கமுவ நபர் மார்ச் மாதம் 24 மற்றும் 26ஆம் திகதிகளில் சென்றுள்ளார்.இதனால், அங்கு தான் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எப்படியோ நேற்று இரவு இந்த நபரை கண்டுபிடித்தோம். இதேவேளை, இந்த நபருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருந்தகமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.