யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆன்மீக எழுச்சி!! அதிகாலை வேளையில் நடந்த நிகழ்வு..!!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களின் முயற்சியாக மாணவர்களால் திருவெம்பாவை ஓதுதல் அதிகாலைவேளை இன்று ஆரம்பமானது.

இத்திருவெம்பாவை ஓதலானது யாழ்பல்கலையின் பரமேஸ்வராஆலயமுன்றலில் ஆரம்பமாகி கலட்டி சந்தியினூடாக பாலசிங்கம் விடுதியை அடைந்து பின் தபால்பெட்டி சந்தியினூடாக பரமேஸ்வாரா சந்தியை அடைந்து பின் மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது.மாணவர்கள் இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும் போது, திருவாசக ஓதலென்பது தமிழர்பண்பாட்டில் குறிப்பாக சைவ மக்களிடையே இருந்து வந்த ஒரு பண்பாட்டு அம்சமாகும். கடந்த காலங்களில் கிராமங்கள் தோறும் இவ் திருவெம்பாவை ஓதல் இடம்பெற்றது.ஆனால், இன்றைய இளைஞர் சமுதாயம் நாகரிக மோகத்தில் அழிந்துவருகின்ற சந்தர்பத்தில், இவ் ஆன்மீக எழுச்சியானது எதிர்வரும் காலங்களில் சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களோடு, அனைத்து பீட மாணவர்களும் இவ் ஆன்மீக செயற்பாட்டிற்கு முன்வரவேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.