அதிரவைக்கும் தகவல்..ஒரே நாளில் 35,928 பேருக்கு கொரோனா தொற்று..!! லண்டனிலிருந்து தப்பியோடும் பொதுமக்கள்..!!

லண்டனில் இருந்து பெருமளவான ஆட்கள், தமது குடும்பம் சகிதம் தூரத்தில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள். கடந்த 2 தினங்களில் மட்டும் சுமார் அரை மில்லியன் மக்கள் இவ்வாறு தப்பி, லண்டனை விட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கும் அதேவேளை,நேற்றைய தினம்(20) 35,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது எதேட்சையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டவை. ஆனால் அது 70,000 ஆயிரத்தை தாண்டி பரவி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு லண்டனில் மட்டும் 35,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அந்த அளவு தொற்றக் கூடிய, வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.இதனை தான் விஞ்ஞானிகள், 70% விகிதத்தால் தொற்றும் திறன் அதிகம் கொண்ட கொரோனா வைரஸ் என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கனவே மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ், தொற்றும் திறன் 33% விதிதத்தில் இருந்தது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் 70% விகிதம் திறன் கொண்டதாக இருப்பது. பல ஆயிரம் பேருக்கு ஒரு நாளில் தொற்றக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.