நள்ளிரவில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு!! வசமாகச் சிக்கிய மில்லியன் கணக்கான பணம்!! மலைத்துப் போன பொலிஸார்!

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நேற்றிரவு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் போதைப்பொருள் பரிவர்த்தனை மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் ரூபா 60 மில்லியன் பணத்தை கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 3 சந்தேக நபர்கள் 300 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதுடன் இந்த சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து ரூபா 59,051,821 பணத்தையும் கைப்பற்றினர்.பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவிக்கையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய பணமெனத் தெரிவித்தார்.கடுவெல, மாலபே மற்றும் வெலிவிட்ட பகுதிகளில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஹெரோயின் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்துடனான தொடர்புகள் குறித்து, இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் பாதாள உலகத் தலைவரான “சோதி உபாலியின் மகள்” என்றும் அவர் கூறினார்.