இலங்கையின் பிரபல சிறுவர் வைத்தியசாலையில் தினமும் ஐந்து சிறுவர்களுக்கு கொரோனா தொற்று..!!

கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


அங்கு சிகிச்சைக்கு வரும் சிறார்களில், தினமும் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.இதுவரை 70 சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு தற்செயலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் சோதனையின் போது, தினமும் ஐந்து சிறுவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.20 நாள் குழந்தையில் இருந்து 14 வயது சிறுவன் வரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளே அதிகம் தொற்றிற்குள்ளாகின்றனர். பெற்றோர் அல்லது உறவினர்கள் ஸ்பரிசிக்கின்றமையே இதற்கு முக்கிய காரணம். அதேபோல, பெற்றோர் கவனயீனமாக பிள்ளைகளை சமூகத்தில் உலாவ விடுவதும் ஒரு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.