மூன்று நாட்களாக காலை உணவின்றி தவித்த கொரோனா நோயாளிகள்..!! தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு..!!

சாலாவ அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சாலாவ அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் 40 பேருக்கு 3 நாட்களாக உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றவர்களினால் உரிய முறையில் நிறைவேற்றவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த வைத்தியசாலையில் உணவு வழங்குவதற்காக உணவு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்திற்கு பணம் தாமதமாக கிடைத்துள்ளமையினால் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நாளுக்கு நாள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இவ்வாறான நிலையில் கடுமையான மன ரீதியான பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பசியில் வாட விடுவது நியாயமல்ல என குடும்பத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையின் பிரதான வைத்தியர், ஹங்வெல்ல சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.