வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்.!! பெரும் பீதியில் லண்டன் மக்கள்..!! விமானக் கட்டுப்பாகள் இறுக்கம்.!!

இங்கிலாந்தில் தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமுலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.இது குறித்து எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, கிறிஸ்துமசை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை நேற்று முதல் விதித்திருக்கிறது.பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன.வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்:இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஏற்கனவே பரவிய வைரஸை விட வித்தியாசமாதாக இருப்பதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்து இருந்ததையும், விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், இதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பது குறித்து, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக நெதா்லாந்து கூறியுள்ளது.பெல்ஜியம்:மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலெக்ஸாண்டா் டிக்ரூ கூறுகையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான அவகாசத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 24 மணி நேரம் அமுலில் இருக்கும். அந்தத் தடையை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.ஜெர்மனி:இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஜெர்மனியும் தெரிவித்துள்ளது.இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் விவகாரத்தை ஜெர்மனி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்தத் வைரஸ் தொடா்பான தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும் ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்தனா்.பிரான்ஸ்:இங்கிலாந்து விமானங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பிரான்ஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரெஞ்சு தொலைக்காட்சியான பிஎஃப்எம்டிவி தெரிவித்தது. இதுதொடா்பான அறிவிப்பை பிரான்ஸ் அரசு விரைவில் வெளியிடும் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.இத்தாலியில் அறிகுறிகளுடன் தென்பட்ட 2 நபர்கள்:இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தென்பட்ட நபர்களை இத்தாலி அரசு கண்டறிந்துள்ளது. ஒரு புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்து திரும்பியதாக, இத்தாலியின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காக இன்று ஒரு அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் தலைமையிலான, சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு, இந்த கூட்டத்தை நடத்துகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியும், கூட்டு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரோடெரிக்கோ எச் ஓப்ரினும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிகிறது.உலக உருண்டையை போர்த்தி இருக்கும் கொரோனா வைரஸ் எனும் மற்றொரு உருண்டை, மருத்துவ உலகிற்கு சவால் விடுக்கும் இந்த வைரஸ் பிடியில் இருந்து இன்னும் விடிவுகாலம் பிறக்காதநிலையில், மேலும், ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.