திருமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருகோணமலை ஜமாலியா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.ஜமாலியா, துளசிபுரம் பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆண்டிஜென் பரிசோதனையில் இந்த முடிவு கிடைக்கப்பெற்றது.இறைச்சிக்கடை உரிமையாளர் உட்பட அந்த பகுதியில் 15 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.