பொதுமக்களின் பொறுப்பற்ற செயலினால் யாழ் நகரில் தேங்கி நின்ற கழிவுகள் துப்பரவுத் தொழிலாளிகளினால் அகற்றல்.!

யாழ்.மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் இன்றையதினம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளால் சுத்தம் செய்யப்பட்டு கழிவுப்பொருட்களும் அகற்றப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் நீர் வழிந்தோடும் செயற்பாடு பாதிக்கப்பட்டது. அதனால் வெள்ள நீர் வழிந்தோடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.இந்த நிலையிலேயே, யாழ். மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளினால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.