தற்போது கிடைத்த செய்தி..யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியை சேர்ந்த 120 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பகுதியில், இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவருடன் மருதனாமடம் கொத்தணியுடன் தொடர்புடைய 90 பேருக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.