முகக் கவசம் இன்றி கடற்கரையில் செல்பி எடுத்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

சிலி ஜனாதிபதி செபஸ்ரியன் பினேரா, கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் எதுவும் அணியாமல் பெண் ஒருவருடன் கடற்கரையில் செல்பி எடுத்தமை சமுக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவருக்கு ரூபா இரண்டரை இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் தான் நடந்து சென்றவேளை பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க கேட்டதாக தெரிவித்தார்.எடுக்கப்பட்ட செல்பியில் ஜனாதிபதியும், குறித்த பெண்ணும் முக கவசம் அணியவில்லை.கொரோனா பரவலை அடுத்து சிலியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நான் தனியே நடந்து சென்றவேளை சிலர் என்னை அடையாளம் கண்டு படம் எடுக்கச் சொல்லி கேட்டனர். நிச்சயமாக நான் முகமூடியை அணிந்திருக்க வேண்டும், ஆனால், நிகழ்வுகள் நடந்த வேகத்தின் காரணமாக நான் அவ்வாறு செய்யவில்லை  என ஜனாதிபதி தெரிவித்தார்.சிலியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 581,135 பேராகவும் உயிரிழந்தோர் தொகை 16,051 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.