யாழ். வலி வடக்கிலும் வேகமாகப் பரவும் கொரோனா..பிரதேச சபை சிற்றூழியருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வலிகாமம் வடக்கு பிதேசசபை சிற்றூழியர் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை உப அலுவலகத்தில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவரது குடும்பத்தினர் மரக்கறி கடையொன்றை நடத்தி வருகிறார்கள். மரக்கறி வாங்குவதற்கு அவர் தினமும் மருதனார்மடம் சந்தைக்குச் சென்று வந்துள்ளார்.தெல்லிப்பழை உப அலுவலகத்தில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் இவர் அடையாளம் காணப்பட்டார்.இதனால் பிரதேசசபை பணிகள் பாதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.