வன்னி வவுனிக்குளத்தில் இன்று மாலை நடந்த பெரும் அனர்த்தம்.!! இருவரைக் காணவில்லை..!! சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்பு..!

மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் மகேந்திரா வகை ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் மாயமாகியுள்ளனர்.இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் 4 பேர் பயணித்த நிலையில், ஒருவர் கரையேறியுள்ளார்.மற்றைய மூவரை தேடும் பணியில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஒரு குழந்தை உட்பட இன்னும் இருவரைக் காணவில்லை. இதனால், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடற்படையினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது, வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைவிட வாகனத்தின் உடைய சாரதியான கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்(37) அவரது மகளாக ரசீந்திரன் சார்ஜனா (3) ஆகியோரை தேடும் நடவடிக்கையில் பொலீசார்,படையினர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் (13 ) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.