சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேருக்கு கொரோனா..!!

யாழ்ப்பாதணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட குடும்பமொன்றே தொற்றிற்குள்ளானது.

சில தினங்களின் முன்னர் குடும்பத் தலைவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் குடும்ப உறுப்பினர்கள் மேலும் 5 பேர் தொற்றிற்குள்ளாகியமை தெரிய வந்துள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.433 பேருக்கு இன்று பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அளவெட்டி, மல்லாகம், இளவாலை பகுதிகளை சேர்ந்த 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்று 11 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதியானது.மருதனார்மடம் சந்தை உபகொத்தணியில் 88 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.