வெறும் 60 விநாடிகளில் கொரோனாவையே தலைதெறித்து ஓட வைக்கும் அற்புதமான வீரியம் நிறைந்த கிருமி நாசினியை உருவாக்கி அசத்திய பிரித்தானியா..!!

Corona நோய்க்கிருமிகளை மொத்தமாக ஒரு நிமிடத்துக்குள் சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி ஒன்றை பிரிட்டன் ராணுவம் தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது.

அலுவலகம், குடியிருப்புகள் என நீடித்திருக்கும் Corona தாக்கத்தை சுமார் 99.99 சதவீதம் வரை அழிக்க கூடிய புதியவகை கிருமி நாசினியை பிரிட்டன் ராணுவம் தயாரித்து அசத்தியுள்ளது. இதற்கு Virusend கிருமிநாசினி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கிருமிநாசினி ஆனது, ஏற்கனவே பலமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் உறுதி செய்யப்பட்ட இந்தக் கிருமிநாசினியை பிரிட்டன் ராணுவம் பயன்பாட்டுக்கு அளிப்பதாகவும், அறிவித்துள்ளது. இதன் விலை மிகக் குறைவானது தான் என்றும், வெறும் 8 பவுண்டுகள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக மெட்வே, கெண்ட், பிரஸ்டன், லாங்க்ஸில் உள்ள கொரோனா சோதனை தளங்களில் ஏற்கனவே இராணுவத்தினரால் இந்த கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், பிரிட்டன் முழுவதுமான பரிசோதனைத் தளங்களில் தேசிய மக்கள் சுகாதார பணியாளர்களுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவத்திற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிருமிநாசினி பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதும், அவை தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.