இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா..பண்டிகைக் காலத்தில் ஊரடங்கை அமுல் செய்யத்திட்டமா..? இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இராணுவத் தளபதி லெஃப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் முடக்கநிலையை அறிவிப்பதா? இல்லையா? என்பதை வார இறுதிநாட்களும், அதற்கு அடுத்துவரும் சில தினங்களுமே முடிவுசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.இன்று ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறினார்.இதேவேளை – இவ்வாறான நிலையில் மேல் மாகாணத்திலிருந்து மக்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.