கொரோனாவுடன் போராடும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு!!

கொரோனாவுடன் போராடும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு..இன்றும் தொடரும் துன்பப் படலம்..எண்ணை வடிந்த முகத்தோடு.. இளைஞர்கள் ஆதரவுடன் உரும்பிராய் அன்னங்கை பிரதேசத்தில் மருதனார்மடம் கொரோனா உப கொத்தணி தொடர்பில் உள்ள குடும்பங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றேன் இரவிலும்!..கனத்த மனத்துடன் பாவச்செயலை செய்வது போன்ற மனோநிலை. காரணம் மரக்கறி பயிரிட்டோர் அதை நம்பி வாழ்வோரைத் தனிமைப்படுத்தினால் எப்படி அதை பிடுங்கி விற்பது??மாடு வளர்க்கும் ஐயா ஒருவர் 5 மாடுகளுக்கு எவ்வாறு சாப்பாடு தேடுவது, பால் கறந்து எப்படி விற்பது, யாருக்கு விற்பது எனும் கவலையோடு இருக்கிறார்.என்னுடன் வந்த மருமகன் பெடியனிடம் விரக்தியாக சொன்னார் ‘டேய் அதில புல்லை வெட்டிப்போட்டிட்டு கன்றுக் குட்டியைக் குடிக்கவிடு..என்னால் இனி பால் எடுக்க வர முடியாது.. எல்லாம் பிழைச்சுப்போச்சு என்று.தனிமைப்படுத்தலில் இருந்தவாறே மாட்டைக் கவனிக்க சுகாதாரப் பரிசோதகராக நான் சொன்ன தீர்வுகள் அவருக்கு பிரயோகம் இல்லாது போகஅவ்விடத்தை கனத்த இதயத்துடன் விட்டு அகன்று வந்துள்ளேன்.அவர் உண்மையாக பாவம் தான்..இதற்கு மேல் எங்களாலும் அவருக்கு இந்த விடயத்தில் உதவ முடியவில்லை.எங்களின் நோக்கம் ஒன்றே..கடமை- உயிர்காப்பு.சுகாதாரத் திணைக்களத்தின் உத்தரவுகளை செவ்வனே செயற்படுத்துகின்றோம் அவ்வளவு தான்.நாம் ஒன்றும் கல்நெஞ்சர்கள் அல்ல, இன்னமும் காலை வேளை உடுத்திய சீருடையை கழற்றாதவனாய், இரவிலும் அல்லல்படுகிறோம்..நாம் அல்லும் பகலும் மழையிலும் வெய்யிலிலும் உங்களுக்காக பாடுபட்டிருக்கிறோம். உங்களுக்காகவும் உங்களை சார்ந்துவாழும் உங்கள் உயிரிலும் மேலான அன்பு உறவுகளுக்காகவும் ஆகக் குறைந்தது, முகக்கவசமாவது சரியாக அணிந்து சென்றால் குறைந்தா போயிடுவியள்..?? எங்களைப்பற்றியும் கொஞ்சம் யோசியுங்கோ..இனியாவது சிறிதாவது யோசித்து செயலாற்றுங்கள்.. எல்லாமே சுபமாக முடியும் என்ற நம்பிக்கையுடன்..பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களில் ஒருவன்.