கொடிய கொரோனாவின் வரவினால் வைரலாகும் சவப்பெட்டி நடனம்..!! பல மில்லியன் பேர் பார்த்த இறுதிச் சடங்கு காட்சி..!!

கொரோனா பேரழிவுக்கு இடையே ஒரு காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. சில நபர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் காணொளி தான் அது. கொரோனாவால் உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், அதனை கிண்டலாக புரியவைக்கவே அந்தக் காணொளி பரவியது.இந்தக் காணொளிகள் மீம்ஸ்களாகவும் பரப்பப்பட்டன. பலரும் இது திரைப்பட காட்சி என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.


தங்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள் இழந்தவர்கள் வலி வேதனையில் இருந்து வெளியே வந்து புன்னகைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஐடோவின் குழு நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இதனால், பலரும் தங்களது குடும்பத்தில் ஏதாவது மரணம் நடந்தால், ஐடோவின் குழுவை அழைத்தனர். அந்நாட்டின் பல வி.ஐ.பி-களின் வீட்டிலும் ஐடோ குழுவின் கால்கள் நடனமாடியுள்ளன.இறுதிச்சடங்கில் நடனம் ஆடுவது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னரே, இக்குழுவின் இறுதிச்சடங்கு நடனங்கள் இணையத்தில் பிரபலம் என்றாலும், தற்போது நெட்டிசன்கள் மூலம் மிக அதிகமாக பிரபலமாகியுள்ளனர்.