800 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்!! இலங்கையர்களுக்கு கிடைக்கப் போகும் பொன்னான வாய்ப்பு.!!

இன்று இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய 2 கிரகங்களாக உள்ளது வியாழன் மற்றும் சனி. இந்த 2 கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என தெரிவிக்கபப்டுகிறது.800 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும் இந்த நட்சத்திரம் எதிர்வரும் 21.12.2020ஆம் திகதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர் கணித்துள்ளனர். அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என அறிவித்துள்ளனர்.வியாழனும் சனியும் 20 ஆண்டிற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும். இந்த நட்சத்திரம் 800 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தெரியும்.கடைசியாக சென்ற 1226ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியது. வியாழன் கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கு இடையே சுமார் மில்லியன் மைல் கணக்கில் இடைவெளி உள்ளது. இவை 2 கோள்களும் பூமியின் பார்வையில் அருகருகே தோன்றும் என்பது அரிய நிகழ்வு என நாசா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20.12.2020ஆம் திகதி சூரியன் மறைவானதும் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றி 22.12.2020ஆம் திகதி வரையும் இருக்கும்.இந்த நேரத்தில் 21.12.2020ஆம் திகதி இரவு மிக பிரகாசமாக இருக்கும், 800 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தெரியும் இந்த நட்சத்திரத்தை டெலஸ்கோப் மற்றும் பைனா குலர் போன்ற கருவிகளுடன் எந்த பகுதியில் இருந்தும் பார்க்கலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.