இலங்கையில் சற்று முன்னர் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு.!!

இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கடந்த 11ம் திகதி அகலவத்தை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கொவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.மக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர் கடந்த 15ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் ,நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.வத்துபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் இன்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த மரண விபரங்களை வெளியிட்டுள்ளது.