கர்ப்பிணியை கொடூரமாக கொலைசெய்து வயிற்றைக் கிழித்து வளரும் கருவைத் திருடிச் சென்ற பெண்ணுக்கு நேரப் போகும் கதி.!!

கர்ப்பிணி ஒருவரின் கழுத்தை நெரித்துக் கொன்று, சமையலறைக் கத்தியைக் கொண்டு கர்ப்பிணியின் வயிற்றக் கிழித்து கருவிலிருந்து சிசுவை வெளியில் எடுத்துச் சென்ற பெண்ணிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. லிசா மான்ட்கோமெரி என்ற அந்த பெண்ணிற்கு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஆயத்தமாவதாகக் கூறப்படுகிறது.இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது, எதிர்காலத்தில் இத்தகைய குற்றம் நிகழாமல் தடுப்பது ஆகியவற்றின் தொடர்பில் நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.கடந்த 1990களிலிருந்து கருவில் இருக்கும் சிசுக்களைக் கடத்தும் அரிய நிலை பற்றி ஆராந்து வரும் போஸ்டன் கல்லூரிப் பேராசிரியர் டொக்டர் ஆன் பர்கெஸ், “மிகக் கொடூரமான இந்தச் செயல்களைப் புரிய ஏகப்பட்ட திட்டமிடல் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் இத்தகைய குற்றங்கள் வெளியில் தெரிய வருவதாக காணாமல்போன, சுரண்டலுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தேசிய நிலையத்தின் மூத்த ஆலோசகர் டொக்டர் ஜான் ராபுன் கூறியுள்ளார்.அப்போது 36 வயதாக இருந்த மான்ட்கோமெரிக்கு 4 பிள்ளைகள் இருந்தனர். அதற்கு மேல் கர்ப்பம் தரிக்க இயலாத நிலையில் இருந்தார் அவர். ஆனால், இதுபற்றி அவரது கணவருக்குக்கூட தெரியாது.இணையம் வழியாக நாய்க்குட்டி விற்கும் பாபி ஜோ ஸ்டின்னெட் எனும் கர்ப்பிணியுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, நாய்க்குட்டி வாங்குவதுபோல அவரது வீட்டுக்குச் சென்றார் மான்ட்கோமெரி.பின்னர் ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, வயிற்றைக் கிழித்து கருவிலிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் மான்ட்கோமெரி. ஸ்டின்னெட்டின் உடலை அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் விட்டுச் சென்றார் அவர்.

தான் கர்ப்பமுற்றிருப்பதாகக் கணவரை ஏமாற்றி வந்த மான்ட்கோமெரி, அந்தப் பிள்ளையைத் தம்முடையது என்றார். பின்னர் அவர் 2007ஆம் ஆண்டில் கடத்தல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்; அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.பலமுறை தள்ளிப்போடப்பட்ட மான்ட்கோமெரியின் மரண தண்டனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.விஷ ஊசி போட்டு அவர் கொல்லப்பட்டால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண்ணாக அவர் இருப்பார்.இதுபோல சிசுவைக் கருவிலிருந்து எடுத்த 21 சம்பவங்களில் 13 குழந்தைகள் உயிர் பிழைத்தாலும் 19 கர்ப்பிணிகள் உயிரிழந்து விட்டனர். சிசுக்களைக் கடத்திச் செல்லும் பெண்கள் அவற்றை தம்முடைய பிள்ளைகளைப் போல அன்புடன் நடத்துவதாகவே கூறப்படுகிறது.