அரச தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கடன் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்..!!

அரச மற்றும் தனியார் பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் உட்பட தரப்பினருக்கான கடன் வழங்கும் வசதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் சுய தொழில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த கடன் பணம் வழங்கப்படுகின்றது.அதற்கமைய பண்டிகை கடன் பணம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரச வங்கிகள் தெரிவித்துள்ளன.
கடன் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு திறைசேரியினால் அரசுக்கு சொந்தமான வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.அதற்கமைய இந்த கடன் வசதி இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக 0.625 மாதாந்த வட்டிக்கமைய வழங்கப்படுகின்றது.இந்தக் கடன் பணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.