யாழில் பிரபல பாடசாலை மாணவனிற்கும் கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் 19 வயதுடைய இணுவில் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரும் அடங்குகின்றார்.

குறித்த மாணவன் பாடசாலைகள் இயங்கியது வரையில் தினமும் பாடசாலைக்கு சென்று வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் யாழ் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளங் காணப்பட்டவர்களில் ஒருவர் இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வருபவர் என கூறப்படுகின்றது.

மேலும் குறித்த மாணவன், பாடசாலைகளிற்கு விடுமுறை அறிவிக்கும் வரை தினமும் பாடசாலை சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.