சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று..!!

யாழ்ப்பாணத்தில் இன்றும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 478 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இணுவில் 1,
மானிப்பாய் 1 , சண்டிலிப்பாய் 1 என மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த மூவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இதேவேளை இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் உடுவில் ஒருவருக்கும், மானிப்பாயில் ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மருதனார்மட உப கொத்தணியில் 73 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தவிர தனிமைப்படுத்தல் முல்லைத்தீவு சேர்ந்த 2 பேருக்கும் கோப்பாய் Covid-19 சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது