கொரோனா தொற்றிற்கான பீ.சீ.ஆர் பரிசோதனை செய்வது எப்படி? விரிவான விளக்கம் தரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்.!! (காணொளி இணைப்பு)

தற்போதைய கொரோனா தொற்று காலப்பகுதியில் குறிப்பாக இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் கொரோனா கோரத் தாண்வமாடிக் கொண்டிருக்கும் காலம் இது. இந்த நேரத்தில் பொதுமக்களின் நன்மைக்காக இரவு,பகல் பாராது சேவையாற்றிக் கொண்டிருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போற்றப்பட வேண்டியவர்களே.குறிப்பாக இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்த வேளையில், பொதுமக்கள் மத்தியில் இந்த சோதனை குறித்து எழுந்துள்ள தேவையற்ற பீதிகளை களையும் முகமாக யாழ். வலிகிழக்கு உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.சீ.ஆர் பரிசோதனை குறித்த விரிவான விளக்கங்களுடன் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.இந்தக் காணொளியைப் பார்ப்பதன மூலம், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு செல்வதற்கு அச்சப்படும் மக்கள் தெளிவடைந்து கொள்ள முடியும். இது எல்லோரினதும் நன்மைக்காகவே.கொரோனா தொற்றிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்பதுடன், உங்கள் அனைவரினதும் பெறுமதி மிக்க உயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள
கொரோனா தொற்று சந்தேகத்திற்குரிய ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.மேலதிக தகவல்களுக்கு காணொளியை தொடர்ந்து பாருங்கள்.

Video : Niroopan Natkunarajah
https://www.facebook.com/niroopan.natkunam/posts/2739978762935847