தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுடன் யாழ் மாநகர சபையில் ஆட்சியமைக்கும் முனைப்பில் மணிவண்ணன் தரப்பு..!! தீவிர பேச்சுக்கள் ஆரம்பம்..!!

யாழ்மாநகரசபை, நல்லூர் பிரதேசசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் வி.மணிவண்ணன் தரப்பு இறங்கியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்ல ஒரு ஆட்சி அமைவதற்கான முயற்சியிலே ஈடுபடவுள்ளோம்“ என இன்று (17) வி.மணிவண்ணன் பருத்தித்துறையில் தெரிவித்தார்.

எதிர்வரும் யாழ்மாநகரசபை அமர்வில் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை இரண்டிலும் சிறப்பான ஆட்சி அமைப்போம். குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்ல ஒரு ஆட்சி அமைய முயற்சிப்போம்“ எனயாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.