சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்னையதினம் 110 பேருக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 02 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.தொற்றுக்குள்ளானவர்கள் சுன்னாகம் பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் எனவும் ஆ.கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.